சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; இளைஞன் கைது

சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; இளைஞன் கைது

சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; இளைஞன் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 4:51 pm

திருகோணமலை கன்னியா பீலியடி பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீலியடியை சேர்ந்த சிறுமி கடந்த மாதம் உறவினரான 23 வயது இளைஞனால், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்