க்ரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி கைச்சாத்து

க்ரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி கைச்சாத்து

க்ரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 11:25 am

க்ரைமியாவை  ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் ரஷ்ய ஜனாதிபதி இந்த ஒப்புதலில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து , க்ரைமியாவில் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற தமது உறவினர்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய புதிய க்ரைமியாவில் வாழவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மீளவும் ரஷ்ய பிரஜைகளானமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து பல்வேறு கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் , தெரிவிக்கப்படுகின்றது.

க்ரைமிய சனத்தொகையில் 58 வீதமானோர் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேனில் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து க்ரைமியாவிலுள்ள ரஷ்யர்களை பாதுகாக்கவே ரஷ்யா முதலில் க்ரைமியா பகுதிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தகக்து.

பின்னர்  யுக்ரேனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது தொடர்பில் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில்   பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்