கால்நடைகளை ஏற்றிச்செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்வு

கால்நடைகளை ஏற்றிச்செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்வு

கால்நடைகளை ஏற்றிச்செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்வு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 2:07 pm

கால்நடைகளை ஏற்றிச்செல்வதற்காக சில பிரதேசங்களில் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மூன்று வார காலப்பகுதிக்குள் நோயினால் பீடிக்கப்பட்ட கால்நடைகள் குறித்து பதிவாகாத பிரதேசங்களில் தடையைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார டி சில்வா குறிப்பிட்டார்.

தடை தளர்த்தப்பட்டுள்ளமைக்கான வர்த்மானி அறிவித்தலை எதிர்வரும் சில தினங்களுக்குள் வெளியிடவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கால்நடைகளின் கால் மற்றும் வாயில் நோய் ஏற்பட்டமையினால், 8 மாவட்டங்களில் ஆடு, மாடு மற்றும் பன்றிகளை ஏற்றிச்செல்வதற்கு அண்மையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதுவரை சுமார் 12 ஆயிரத்து 500 க்கும் அதிகமான கால்நடைகளின் கால் மற்றும் வாயில் நோய் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார டி சில்வா தெரிவிக்கின்றார்.

கால் மற்றும் வாயில் நோய்த் தொற்றியமையினால் சுமார் 260 க்கும் அதிகமான ஆடு, மாடு, பன்றி போன்ற கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்