காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தோல்வி

காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தோல்வி

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 3:38 pm

மலேசிய விமானம் காணாமற் சென்று இன்றுடன் 2 வாரங்களான நிலையில்  அதனை தேடும் நடவடிக்கைகள் தோல்விகளையே சந்திக்கின்றது.

காணாமல் போன மலேஷிய விமானத்தினுடையதாக  இருக்கலாம் என  சந்தேகிக்கப்படும் இரண்டு பாகங்களை கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலியா  அறிவித்திருந்தது.

இதனையடுத்து ,  இந்து சமுத்திரத்தில் இந்த துகள்களைத் தேடும் பணியில் விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

முதல் நாள் தேடும் பணிகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் இந்த பணிகள் மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில்  சீனா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் விமானங்களும் இன்று இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்