கட்டிட நிர்மாண ஆலோசனை சேவை இம்முறை யாழில்

கட்டிட நிர்மாண ஆலோசனை சேவை இம்முறை யாழில்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 7:57 pm

வீ்ட்டு நிர்மாணத்தில் ஈடுபடுபவர்களுக்கு துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் யாழ். மத்திய கல்லூரியில் கட்டிட நிர்மாண ஆலோசனை சேவையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக செய்தி வாசிப்பில் ஆர்வமுடையவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில்  நியூஸ்பெஸ்ட்டினால் திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வும் நாளை நடத்தப்படவுள்ளது.

நியூஸ்பெஸ்ட் மற்றும் எஸ்லோனின் ஏற்பாட்டில் யாழ். மத்திய கல்லூரியில் இன்று காலை ஆரம்பமான கட்டிட நிர்மாண ஆலோசனை சேவையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு வீட்டு நிர்மாண ஆலோசனைகளைப் பெற்றுவருகின்றனர்.

இதேவேளை,யாழ் மாவட்டத்தில் ஊடகத்துறையில் ஆர்வமுடையவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் திரைப்பரீட்சை மற்றும் குரல்தேர்வினை நாளை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ் மத்திய கல்லூரியில் நாளைக் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ள திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வில் ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்