இலங்கை பெண் ஒருவருக்கு சவுதியில் 1200 கசையடிகள் விதிப்பு

இலங்கை பெண் ஒருவருக்கு சவுதியில் 1200 கசையடிகள் விதிப்பு

இலங்கை பெண் ஒருவருக்கு சவுதியில் 1200 கசையடிகள் விதிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 9:40 am

சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்துதருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கசையடிக்கு மேலதிகமாக 12 வருடகால சிறைத்தண்டனையும் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவரான சந்ரசிறி வீரசேகர என்பவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டுள்ளார்.

நிக்கவெரட்டிய, விட்டிகுழிய, வதுவெஸ்ஸ பகுதியை சேர்ந்த இலங்கைப் பெண் ஒருவருக்கே சவுதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஜித்தாவிலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் 2006 ஆம் ஆண்டு மே மாதம் வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.

பணியாற்றிய வீட்டில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சில வருடங்களுக்கு முன்னர் இந்த பெண், சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்கின்றவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்ட பின்னரே அனுப்பிவைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்