அஜித் வீட்டில் ஷாருக்கானின் பயிற்சியாளர்

அஜித் வீட்டில் ஷாருக்கானின் பயிற்சியாளர்

அஜித் வீட்டில் ஷாருக்கானின் பயிற்சியாளர்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 11:02 am

வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விடயம் தான்.

இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உடலை நிலையை பரமறிப்புக்காக பொலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்துள்ளனர்.

அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி பாரம் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.

இந்த விஷயத்தை அறிந்த பொலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.

கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்