தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2014 | 7:06 pm

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, மன்னார் நகரில் உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த மாபெரும் போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்தகால யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றம் துன்பங்களிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமற்போன உறவுகளை தேடித் தருமாறும், தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வு வேண்டும் எனவும், மனித புதைகுழி தொடர்பான சுயாதீன விசாரணையை நடத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தில், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்