கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய முதல்வர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய முதல்வர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய முதல்வர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2014 | 3:24 pm

கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வர்கள் பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை வகித்துள்ளனர்.

உலகில் பெரும்பாலான இணைய பயனாளிகள் பயன்படுத்தும்  தேடல் தளமான கூகுள் , இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ள முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில்  குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்கள் தொடர்பில் கருத்துக் கணிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் கூகுள் தேடல் நிலவரத்தில்  முதல்வர்கள் தொடர்பில்  இணையத்தில் காணப்படும் நிலையை அறிந்து கொள்வதற்கு   இந்த கணிப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாக   கூகுள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்