கடனட்டை மோசடி; இலங்கையர் மூவர் சென்னையில் கைது

கடனட்டை மோசடி; இலங்கையர் மூவர் சென்னையில் கைது

கடனட்டை மோசடி; இலங்கையர் மூவர் சென்னையில் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2014 | 6:52 pm

கடனட்டை மோசடி தொடர்பில் சென்னை பொலிஸாரால் இலங்கையர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் சர்வதேச பொலிஸாரினால் தேடப்படுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கடனட்டைகளை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட 28 வயதான ஜயதரன் தம்பிபிள்ளை, 37 வயதான நவனீத ராஜா மற்றும் பிரதீப் குமார் ஆகிய மூவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்