உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரில் சாதிக்க வேண்டும் -மொஹமட் ஹாபிஸ்

உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரில் சாதிக்க வேண்டும் -மொஹமட் ஹாபிஸ்

உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரில் சாதிக்க வேண்டும் -மொஹமட் ஹாபிஸ்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2014 | 4:10 pm

பங்களாதேஷின் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக இருபதுக்கு- 20  கிரிக்கெட் தொடரின் சுப்பர் டென் சுற்று இன்று ஆரம்பமாகின்றது.

இதற்கமைய இதில் பிரிவு இரண்டில்  இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ணக் இருபதுக்கு- 20  கிரிக்கெட் தொடரில் சம்பியனான இந்திய அணி , அதன் பின்னர் நடைபெற்ற மூன்று தொடர்களிலும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.

இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களின் உதவியுடன் எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் எதிரணியினரை வெற்றிக் கொள்ள முடியும் எனவும் தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஆசியக் கிண்ண போட்டிகள் போன்று இந்த தொடரிலும் சாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அணித்தலைவர் மொஹமட் ஹாபிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இருபதுக்கு- 20  தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள்  மூன்று முறை மோதியுள்ளதுடன்,  இதில்  2 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்