வெற்றியை தனதாக்கியது இந்தியா

வெற்றியை தனதாக்கியது இந்தியா

வெற்றியை தனதாக்கியது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 10:28 am

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 20 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிகொண்டுள்ளது.

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்றதுடன், சுரேஸ் ரெய்னா 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

மூன் அலி 46 ஓட்டங்களையும், மிச்சல் லம் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்