விரைவில் ‘பாஸ் (எ) பாஸ்கரன் 2’

விரைவில் ‘பாஸ் (எ) பாஸ்கரன் 2’

விரைவில் ‘பாஸ் (எ) பாஸ்கரன் 2’

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 3:12 pm

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோரின் கூட்டணியில் மீண்டும் உருவாக இருக்கிறது  ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ இரண்டாம் பாகம்.

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க, ராஜேஷ் இயக்கிய படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’.

ஆர்யாவின் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிட்டார்.

இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ராஜேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இதனால், மீண்டும் ஹிட் கூட்டணியோடு ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ இரண்டாம் பாகத்தினை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ஆர்யா தயாரிக்க இருக்கும் இப்படத்தில் பழைய கூட்டணியோடு தற்போது தமன்னாவையும் சேர்க்கத் திட்டமாம்.

படத்திற்கு என்ன பெயர், இசையமைப்பாளர் யார், ஒளிப்பதிவாளர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களோடு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்