முன்னணி வீரர்கள் உபாதை; சிக்கலை எதிர்நோக்கும் தென்னாபிரிக்கா

முன்னணி வீரர்கள் உபாதை; சிக்கலை எதிர்நோக்கும் தென்னாபிரிக்கா

முன்னணி வீரர்கள் உபாதை; சிக்கலை எதிர்நோக்கும் தென்னாபிரிக்கா

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 2:48 pm

உலகக் கிண்ண 20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணியின் வீரர்கள் சிலர் உபாதைக்கு உள்ளாகியுள்ளமை, அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னாபிக்க அணித் தலைவர், மற்றும் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் தனது முதலாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்வரும் சனிக்கிழமை தென்னாபிரிக்க அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு வீரர்களும் தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையில் இருந்து மீண்டுவருவதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் சுப்பர் 10 சுற்றில் இருவரும் விளையாடுவது தொடர்பில் இறுதித் தருணத்திலேயே தீர்மானிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்