மாற்றுப் பொருளாதாரத்தின் தேவையை உணர்த்தும் விஜயலட்சுமியின் கதை!

மாற்றுப் பொருளாதாரத்தின் தேவையை உணர்த்தும் விஜயலட்சுமியின் கதை!

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 10:13 pm

குடும்ப வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் மலையகப் பெண்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தனது குடும்பத்தின் நலனைக் கருத்திற்கொண்டு  பணிப்பெண்ணாக கடல் கடந்து சென்ற மலையகப் பெண்ணொருவரின் கதை இது.

ஹட்டன் லொனக் தோட்டத்தில் வசித்து வரும் விஜயலட்சுமி, 2008 ஆம் ஆண்டு சவுதியை நோக்கிப் பயணமானார்.

கடல் கடந்து வெகுதூரம் சென்ற இவரின் எதிர்பார்ப்புகள் அங்கு நிறைவேறவில்லை.

உரிய ஊதியம் வழங்கப்படாமையினால் மீண்டும்  தாய்நாடு திரும்பும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டார்.

இருந்த போதிலும் தமது கஷ்டங்கள் தீராத நிலையில் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார்.

இதற்கிணங்க 2013ஆம் ஆண்டு இவரின் வாழ்வில்  அசம்பாவித சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

கடந்த வருடம் வீட்டு உரிமையாளர்களுடன் காரில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் வீட்டு உரிமையாளர் உயிரிழந்ததுடன், விஜயலட்சுமி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இதனால் சில மாத கொடுப்பனவுகளை இழந்த நிலையில் மீண்டும் இவர் நாட்டை வந்தடைந்தார்.

பின்னர், கொழும்பு வைத்தியசாலையிலும், கண்டி வைத்தியசாலையிலும் இவர் சிகிச்சை பெற்றார்.

தற்போதும் மருத்துவ சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலையை இவர் நாடுகின்றார்.

வெளிநாடுகளை நம்பி தொழில்வாய்பைப் பெற்று செல்லும்  இவ்வாறான பெண்கள் நாளைய எமது சமூகத்திற்கு உதாரணமானவர்கள்.

ஆகவே, மாற்று பொருளாதாரம் ஒன்றின் தேவை மலையகத்தில் உள்ளது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்