மாயமான விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் பாகங்கள் கிடைத்துள்ளன

மாயமான விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் பாகங்கள் கிடைத்துள்ளன

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 10:21 am

காணாமல் போன மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என  சந்தேகிக்கப்படும் இரண்டு பாகங்களை கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபொட் தெரிவித்துள்ளார்.

229 பேருடன் காணாமால் போன இந்த விமானத்தை தேடும் பணிகளை தென்னிந்தியக் கடற்பரப்பில் அவுஸ்திரேலியக் கப்பல்கள் முன்னெடுத்துள்ளன.

செய்மதி புகைப்படங்கள் ஊடாக இந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாகங்களை தேடும் பணிகளுக்காக விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்