பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவு: நால்வர் குற்றவாளிகள் என தீர்ப்பு

பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவு: நால்வர் குற்றவாளிகள் என தீர்ப்பு

பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவு: நால்வர் குற்றவாளிகள் என தீர்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 3:39 pm

சென்ற ஆண்டு இந்தியாவின் மும்பை நகரில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் குற்றவாளிகள் என இன்று மும்பை  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை தொடர்பிலான வாதங்கள் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஐந்தாவதாக குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் 18 வயதுக்குக் குறைவாக இருந்ததால் அவர் சிறப்பு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை பணிக்காகப் படமெடுக்கச் சென்றிருந்தபோது ஒரு 22 வயதுப் பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அந்நேரம் அப்பெண்ணோடு சென்றிருந்த உடன் வேலைபார்க்கும் ஆண் ஒருவர் கட்டிவைத்து தாக்கப்பட்டார்.

சென்ற வருடம் ஜூலை மாதம் அதே ஆடைத் தொழிற்சாலையில் பெண் தொலைபேசி ஆப்பரேட்டர் ஒருவரும் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இன்று குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்ட நான்கு பேரில் மூவர்  பெண் தொலைபேசி ஆப்பரேட்டர் சம்பவத்திலும் குற்றவாளிகள் என்பது அடையாளங்காணப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்