நாயகன் அவதாரம் எடுக்கும் கானா பாலா

நாயகன் அவதாரம் எடுக்கும் கானா பாலா

நாயகன் அவதாரம் எடுக்கும் கானா பாலா

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 12:52 pm

கானாவிற்கு பெயர் போனவர் கானா பாலா தற்போது அவரது திறமையை நடிப்பிலும் வெளிபடுத்துவாரோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.

ஆடிபோனா ஆவணி என்ற பாடலை பாடி சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல் எல்லோர் மனதிலும் அறிமுகமானவர் கானா பாலா.

சாதாரணமாக இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளில் என்னை வைத்து படம் எடுங்கள் என தமாஷாக பேசி வந்தவர்.

தற்போது நிஜமாகவே  நாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி தற்போது பாரீஸ் கார்னர் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் கானாபாலா, சென்னையின் வருமையை மையமாக கொண்டு எடுக்கவுள்ள இப்படத்தில் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்க போறாராம் கானா பாலா.

கானா உலகத்தை கலக்கிய கானா பாலா தற்போது கதாநாயகனாக வலம் வர இருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்