தாய்லாந்து சென்றவர் ஒரு தசாப்தத்தின் பின்னர் தாய்நாடு திரும்பியுள்ளார்

தாய்லாந்து சென்றவர் ஒரு தசாப்தத்தின் பின்னர் தாய்நாடு திரும்பியுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 6:57 pm

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தாய்லாந்து சென்று தொடர்பற்றுப் போயிருந்தவர் 10 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

திருமணம் நடைபெற்ற சில நாட்களில் தொழில் வாய்ப்பிற்காக, தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலம் இவர் வெளிநாடு சென்றிருந்தபோதும், தனது தொழிலுக்கான ஊதியத் தொகையைக்கூட பெற்றுக்கொள்ளாது நாடு திரும்பியுள்ளார் ஹபரணையைச் சேர்ந்த எச்.எம்.பிரியந்த லால் ஹேரத்.

நிம்மதியான வாழ்விற்காக வீடொன்றைக் கட்டிக்கொள்ளும் நோக்கில் வெளிநாடு சென்று நிர்க்கதிக்குள்ளான பலரில் இவரும் ஒருவர்.

கனவுகளை நினைவாக்கும் நோக்கிலும் பொருளாதார சிக்கல்களிலிருந்து மீள்வதற்காகவும் திருமணமான புதிதில் தாய்நாட்டை விட்டு தாய்லாந்து புறப்பட்டார் பிரியந்த.

தாய்லாந்தின் கப்பலொன்றில் சிறிது காலம் பணியாற்றிய இவர், பல மீன்பிடிப் படகுகளிலும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அங்கு இவர் பலவித பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

வேலை தேடிச் செல்லும் முன், வீட்டிற்கு அடித்தளமிட்டுச் சென்றுள்ளார்.

தற்போதும் அப்பகுதியில் வெறும் அடித்தளம் மட்டுமே புதர்மண்டிக் காணப்படுகிறது!

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்