சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைய இலங்கை முயற்சி – பீட்டர் ஸ்பிலின்டர்

சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைய இலங்கை முயற்சி – பீட்டர் ஸ்பிலின்டர்

சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைய இலங்கை முயற்சி – பீட்டர் ஸ்பிலின்டர்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 9:21 pm

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் தலையீடுகளை மேற்கொள்ளல் மற்றும் அசாதாரணமான உபாயங்களைக் கையாளுதல் என்பவற்றை இலங்கை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் நேற்று (19) இடம்பெற்ற  உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தையின் போதே அந்த சபையின் பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மஹேஷன் ஆகியோரை விடுதலை செய்தமை சிறந்த விடயம் என்றாலும் இதனூடாக உலகத்தை ஏமாற்ற முற்படக்கூடாது என பீட்டர் ஸ்பிலின்டர் இந்த பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் போர் சூழல் குறித்து உண்மை நிலைமை தொடர்பில் அமைதியாகக் கருத்துத் தெரிவிக்கும் விமர்சனையாளர்களின் குரலுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கைத் தரப்பினர் நிறுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி ஐ .நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு வெளியிட்டுள்ள இராஜதந்திர அறிக்கையின் ஊடாக இவர்கள் விடுதலைப் புலிகள் மீளெழுச்சிக்கு துணைப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்த முற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போலியான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள பீட்டர் ஸ்பிலின்டர் இதனூடாக இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு எதிரானவர்களை அடக்குவதற்கும் சம்மந்தப்பட்டவர்களின் பெயரை கலங்கப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட சில நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைய முற்பட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்