குப்பையில் வாழ்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்து வருகின்றோம் – கோத்தாபய ராஜபக்ஸ

குப்பையில் வாழ்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்து வருகின்றோம் – கோத்தாபய ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 5:38 pm

தெமட்டகொட பிரதேசத்தில் அமையப்பெறவுள்ள புதிய வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்ததாவது;

“இந்த மாநகரசபையில் காணப்பட்ட பிரதான பிரச்சினையான குப்பை அகற்றுவதற்கு நாங்கள் தற்போது நிலையான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். கொலன்னாவையில் குப்பைகளைப் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வாழ்ந்த 300 பேருக்கு வீடுகளை அமைத்து வருகின்றோம். உலக வங்கியின் விசேட குழுவினர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் சுமார் 90 மில்லியன் டொலர்கள் இதற்கு செலவாகின்றது.”

இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலும் கலந்துகொண்டார்.

“அரசியல் ரீதியாக நான் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறந்த செயற்பாட்டாளர். என்னில் எந்த பிரச்சினையும் இல்லை. எனது தலைவரினாலும் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஒப்பிடக்கூடிய அரசியல் அனுபவமுள்ள ஒருவர் இருப்பாராயின் அது ஏ.ஜே.எம். முஸம்மில் என்பதனை கூறிக்கொள்கின்றேன்,” என்றார் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்