காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க எப்.பி.ஐ உதவி

காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க எப்.பி.ஐ உதவி

காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க எப்.பி.ஐ உதவி

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 10:45 am

காணாமல் போயுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணிகளுக்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ (Federal Bureau of Investigation) உதவியை வழங்கியுள்ளது.

இந்த விமானம் விமானி ஒருவரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மலேசியா முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு அமெரிக்க விசாரணையாளர்கள் உதவியை வழங்கவுள்ளனர்.

இந்த விமானத்தின் விமானி ஒருவர் கணனியில் இருந்த தரவுகளை நீக்குவதாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி காணாமல் போன விமானத்தை தேடும் பணிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த அணியினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் விமான சேவை மற்றும் போக்குவரத்து விபத்து நிறுவனங்களை மலேசியா தொடர்பு கொண்டுள்ளதாக ஏற்கனவே வெள்ளை மாளிகையின் பேச்சாளர்  தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்