காணாமற்போனார் தொடர்பில் மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியம் (Video)

காணாமற்போனார் தொடர்பில் மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியம் (Video)

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 2:30 pm

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் சாட்சி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் நூற்றுக்கும் அதிகமானோர் சமூகமளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு – வாகரை, தெற்கு கிரான் ஆகிய பகுதிகளில் சாட்சி விசாரணைகள் பதிவுசெய்யப்படவுள்ளன.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாதவர்கள், இந்த 03 நாட்களில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்