கடமைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

கடமைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

கடமைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 11:27 am

கடமைக்குச் சென்ற மெதிரிகிரிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்றிரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெண்ணொருவரை சிலர் தாக்குவதாக 119 என்ற அவசர அழைப்புப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் அந்த பகுதிக்குச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போதே, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மெதிரிகிரிய வைத்தியசாலையிலும், மற்றொருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்