கஞ்சா கடத்தலில் கைதான பிரதேச சபைத் தலைவர்: திட்டமிட்ட சதியென நீதிமன்றத்தில் தெரிவிப்பு

கஞ்சா கடத்தலில் கைதான பிரதேச சபைத் தலைவர்: திட்டமிட்ட சதியென நீதிமன்றத்தில் தெரிவிப்பு

கஞ்சா கடத்தலில் கைதான பிரதேச சபைத் தலைவர்: திட்டமிட்ட சதியென நீதிமன்றத்தில் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 9:35 pm

கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைதான வில்கமுவ பிரதேச சபைத் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மஹியங்கனை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலானை குற்றத் தடுப்பு பிரிவினரினால் சந்தேக நபர்கள் நேற்றிரவு (19) ஹிராதுருகோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் பயணித்த வாகனம், திருத்தப் பணிகளுக்காக உக்குவெல வாகனம் திருத்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது, பல மாதங்கள் பழமையான கஞ்சா தொகையை அரசியல் பகை காரணமாக திட்டமிட்ட வகையில் கெப் வண்டியில் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கஞ்சா தொகையுடன் வில்கமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயந்த வீரசேகர, முன்னாள் தலைவர் ரஞ்ஜித் குமாரசிங்க மற்றும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வில்கமுவ பிரதேச சபைக்கு சொந்தமான கெப் வாகனத்திலிருந்து 2 கிலோ 835 கிராம் எடையுடைய கஞ்சா தொகையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வில்கமுவ பிரதேச சபைத் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் இதற்கு முன்னர் தமது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் கஞ்சா போதைப் பொருளை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்