என்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலையடைகின்றேன் – CNN இற்கு ருக்கி பெர்னாண்டோ

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலையடைகின்றேன் – CNN இற்கு ருக்கி பெர்னாண்டோ

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலையடைகின்றேன் – CNN இற்கு ருக்கி பெர்னாண்டோ

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 7:52 pm

தன்னைக் கைது செய்தமையானது இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்காக சர்வதேசத்தைத் தூண்டி விடும் செயலாகவே கருதுவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ  CNN செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

சி.என்.என் இணையத்தளம் ருக்கி பெர்ணாண்டோவை மேற்கோள் காட்டி இதனை வெளியிட்டுள்ளது.

[quote]திட்டமிட்ட முயற்சியாகவே இதனை நான் கருதுகின்றேன். எதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள், விமர்சிப்பவர்கள் மற்றும் சவால் விடுபவர்களை அடக்குவதற்கான தலையீடாகவே இதனை எம்மால் நோக்க முடிகின்றது. இலங்கைக்கு வெளியில் வாழ்பவர்களால் நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடிவதில்லை. ஆகவே, இது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன். என்னுடன் நெருக்கமானவர்கள் மற்றும் கடந்த காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலையடைகின்றேன்.[/quote]

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளானது சர்வதேச ஊடகங்களுடன் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது என CNN செய்தி சேவைக்கு ருக்கி பெர்னாண்டோ தெரவித்துள்ளார்.

இந்த கைது ஜெனீவா நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்