இலங்கை பட்மின்டன் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச பட்மின்டன் சம்மேளனம்

இலங்கை பட்மின்டன் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச பட்மின்டன் சம்மேளனம்

இலங்கை பட்மின்டன் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச பட்மின்டன் சம்மேளனம்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 4:53 pm

இலங்கை பட்மின்டன் சங்கத்திற்கு எச்சரிக்கையுடனான கடிதம் ஒன்றை சர்வதேச பட்மின்டன் சம்மேளனம் அனுப்பி வைத்துள்ளது.

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பட்மின்டன் சம்மேளனத் தேர்தலும் பொதுசபைக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நடைபெறாவிடின் இலங்கை பட்மின்டன் சங்கத்திற்கு எதிராக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக் கடிதம் சர்வதேச பட்மின்டன் சங்கத்தால் இலங்கை பட்மின்டன் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா உறுதிப்படுத்தினார்.

இலங்கை பட்மின்டன் சங்கத்தின் தலைவரான சுராஜ் தந்தெனிய, குறித்த கடிதம் தமக்கு கிடைத்ததென தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்