இந்திய மீனவர்கள் 74 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இந்திய மீனவர்கள் 74 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இந்திய மீனவர்கள் 74 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 11:23 am

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட, மேலும் 74 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 53 மீனவர்கள், 13 மீன்பிடி படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும், ஏனைய 21 மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாவும் கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்