ஆபத்துக்களையெல்லாம் உள்ளே இருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றோம் – ரவூப் ஹக்கீம்

ஆபத்துக்களையெல்லாம் உள்ளே இருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றோம் – ரவூப் ஹக்கீம்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2014 | 8:12 pm

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கொம்பனித் தெருவில் நேற்றிரவு (19) நடைபெற்றது.

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு,  நீதி அமைச்சரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

“இந்தக் கட்சி பாராளுமன்றத்தில் இருக்கின்ற நேரம்,  நாடு நகர அபிவிருத்தி சட்டமூலமொன்று கொண்டு வந்தார்கள். அது கொண்டு வந்த நோக்கம் எமக்குத் தெளிவாகத் தெரிந்தது. நகர அபிவிருத்தி அதிகார சபை, அது நினைக்கின்ற இடமெல்லாம் புனித பிரதேசம் என பிரகடனம் செய்ய முடியும்.

அப்போது எங்களுக்கு இருந்த ஒரே ஒரு மாற்று வழி உயர்நீதிமன்றத்திற்கு செல்வது தான்.  அதனை நாங்கள் சவாலுக்கு உட்படுத்தியதால் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தால் மட்டும் இயலாது. எல்லா மாகாண சபைகளும் இணங்க வேண்டும்.

எனவே, கிழக்கு மாகாணம் அதற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், பாராளுமன்றத்தில் அந்த சட்டமூலம்  நிறைவேற்றப்படாமல் போனது. இல்லாவிட்டால், கண்ட கண்ட இடங்களெல்லாம் புனித பிரதேசமாக இருந்திருக்கும்.  இவ்வாறான ஆபத்துக்களையெல்லாம் நாங்கள் உள்ளே இருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றோம்.”

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்