வலஸ்முல்லயில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொலை

வலஸ்முல்லயில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 9:32 pm

வலஸ்முல்ல – கலஹிடியாவ, ஓமாறே பிரதேசத்தில் ஒருவர்  சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 2 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த நபரின் விட்டிற்கு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்,  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார்.

24 வயதான W.M. விஜித் குமார  என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 24  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்