மாயமான மலேசிய விமானம் தலிபான்களின் கட்டுப்பாட்டிலா?

மாயமான மலேசிய விமானம் தலிபான்களின் கட்டுப்பாட்டிலா?

மாயமான மலேசிய விமானம் தலிபான்களின் கட்டுப்பாட்டிலா?

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2014 | 10:51 am

மாயமான மலேசிய விமானம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு பாகிஸ்தானில் நுழைந்திருக்கக்கூடும் என்று இங்கிலாந்து நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இறுதியாக மார்ச் 8ஆம் திகதி காலை 8.11 அளவில் இங்கிலாந்து நிறுவனத்தின் ‘இன்மார்சாட்’ செயற்கைக்கோளில் அந்த விமானத்தின் சமிக்ஞை பதிவாகியுள்ளது. அதன் படி தாய்லாந்து முதல் கசகஸ்தான் எல்லை வரையோ அல்லது இந்தோனேசியா முதல் தென் இந்திய பெருங்கடல் வரையோ விமானம் பறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் செயற்கைக்கோள் தகவலை ஆதாரமாக வைத்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இன்மார்சாட் செயற்கைக் கோளில் விமானத்தின் சிக்னல் பதிவானபோது அந்த விமானம் வானில் பறந்திருக்க வாய்ப்பில்லை. தரையில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடகிழக்கு பாகிஸ்தானில் விமானம் தரையிறங்கி இருக்கக் கூடும். ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளும் வடகிழக்கு பாகிஸ்தான் பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளில் விமானம் தரையிறக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாயமான மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் ‘போயிங் 777’ ரகத்தைச் சேர்ந்தது. மிகப் பெரிய விமானமான அதனை தரையிறக்க குறைந்தபட்சம் 5,000 அடி ஓடுபாதை தேவை என்று ‘தி இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணாமல்போன மலேசிய விமானத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென என தலிபான் அமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்