மாயமான மலேசிய விமானத்தின் விமானி இறுதியாக பேசியது என்ன?

மாயமான மலேசிய விமானத்தின் விமானி இறுதியாக பேசியது என்ன?

மாயமான மலேசிய விமானத்தின் விமானி இறுதியாக பேசியது என்ன?

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2014 | 7:23 am

மலேசியா, கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி  239 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளன.

மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும் விமானம் குறித்து எவ்வித தகவல்கள் கிடைக்கவில்லை.

அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.

விமானத்தின் தலைமை விமானியின் வீட்டில் மலேசிய பொலிஸார் நேற்றைய தினம் சோதனையில் ஈடுபட்டனர். விமானியின் மன நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்தவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே விமானம் தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானிகள் அறையில் இருந்து  மலேசிய விமான கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய விவரம் வெளியாகி உள்ளது.

விமானி  அறையில் இருந்து பேசியவர் அனைத்தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம் (“All right, good night”) என பேசியுள்ளார். அதன் பிறகு தான் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலேசிய விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படுவதற்கு முன்பாக விமானிகள் அறையில் இருந்து, அனைத்தும் சரியாக உள்ளது.  இரவு வணக்கம் என்று பேசியது உதவி விமானி என புதிய தகவல் தெரிவிக்கின்றது.

கடைசி வார்த்தைகளை பேசியது யார் என்பது சரியாக தெரிய வராத நிலையில் அதனை விமானி பேசியிருப்பார் என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்