மறைத்துவைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளுக்கு எரியூட்டினார் தாய்; மகன் கைது

மறைத்துவைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளுக்கு எரியூட்டினார் தாய்; மகன் கைது

மறைத்துவைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளுக்கு எரியூட்டினார் தாய்; மகன் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2014 | 9:04 am

பகிர்ந்தளிப்பதற்காக கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை மறைத்துவைத்த குற்றச்சாட்டின்பேரில் அக்குரஸ்ஸை – வில்பிட்டி தபால் நிலைய தபால் விநியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை, சந்தேகநபர் தனது பொறுப்பில் எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த சிலர், கத்தியை காண்பித்து, தன்னை அச்சுறுத்தி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பறித்துச்சென்றுள்ளதாக குறித்த நபர் அக்குரஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், குறித்த நபரின் தாய், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எரியூட்டியுள்ளதாக இந்த முறைப்பாடு தொடர்பில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் போலி முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளமையை, சந்தேகநபர் ஏற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்