தோனிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்குத் தடை

தோனிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்குத் தடை

தோனிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்குத் தடை

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 5:41 pm

ஐ.பி.எல் சூதாட்ட நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி, இந்திய  அணித் தலைவர் தோனிக்கு எதிராக செய்தி  வெளியிட்டிருந்த  தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு  சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தோனி தாக்கல் செய்த மனுவில், “கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாகக்  கூறி  குறித்த தொலைக்காட்சி கடந்த சில வாரங்களாக  செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.

இதனால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம்  முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எனது  நற்பெயருக்கும் புகழுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி  உள்ளனர்.

ஆகவே, அந்த நிறுவனம் இது தொடர்பான செய்திகளைத்  தொடர்ந்து வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும்  ஐ.பி.எஸ் ஜி.சம்பத்குமார் ஆகியோர் ரூ.100 கோடி  நஷ்டஈடாகத் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,”  என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது தோனி் தொடர்பான செய்தியைத் தொடர்ந்து  வெளியிட்ட அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 2 வாரகால
இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்