தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டும் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டும் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 7:44 pm

தொம்பே பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கட்சி ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தொம்பே கிம்புல்விலவத்தை பகுதியில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது மற்றுமொருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, எதிர்ப்புத் தெரிவித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுவரொட்டிகளை ஒட்டிய கட்சி ஆதரவாளர் காயமடைந்து தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 50 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்