க்ரைமியாவை தனி நாடாக அங்கீகரிக்க ரஷ்யா தீர்மானம்

க்ரைமியாவை தனி நாடாக அங்கீகரிக்க ரஷ்யா தீர்மானம்

க்ரைமியாவை தனி நாடாக அங்கீகரிக்க ரஷ்யா தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2014 | 9:30 am

க்ரைமியாவை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கிரைமியா மீது தடைவிதித்த சில மணித்தியாலங்களில், க்ரைமியாவை இறையாண்மையுள்ள தனி நாடாக அங்கீகரிக்கும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.

இதன்மூலம் க்ரைமியா ரஷ்யாவில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளன.

க்ரைமியாவில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 97 வீதமானோர் கிரைமியா, ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் இணைந்து யுக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் சிலரினது சொத்துக்களை முடக்கவும், அவர்களுக்கு பயணத் தடை விதிக்கவும் தீர்மானித்தது.

இந்த வரிசையில், க்ரைமியாவின் தற்போதைய தலைவர் சர்ஜெய் அக்செயொனொவ் மற்றும் க்ரைமியாவின் சபாநாயகர் விளாடிமிர் கொண்ஸான்டினொவ் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியிட்டுள்ள பட்டியலில், ரஷ்யாவின் பிரதி பிரதமர் டிமிட்ரி ரொகோஸின் மற்றும் ரஷ்யாவின் மேல் சபை உறுப்பினர் வெலன்டினா மட்வியன்கோ மற்றும் யுக்ரைன் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் ஆகியோர் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் பல தடைகளை விதிப்பதற்கு தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்