கிரைமியாவை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது

கிரைமியாவை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது

கிரைமியாவை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 10:10 pm

உக்ரைனில் இருந்து விடுதலை பெறுவதாக அறிவித்துள்ள கிரைமியாவை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் புதின் பிரகடனம் செய்துள்ளார்.
உக்ரைனின் சுயாட்சிப் பகுதியாக இருந்து வந்தது கிரைமியா.
உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கும் விவகாரத்தில் அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உக்ரைனின் கிரைமியா பகுதிக்குள் நுழைந்து அதைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ரஷ்யா.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், கிரைமியா ரஷ்யாவுடன் இணைவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில் 97% பேர் ரஷ்யாவுடன் இணைய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து கிரைமியா நாடாளுமன்றம், தமது நாடு உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெற்றதாகப் பிரகடனம் செய்ததுடன் ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்தது.
மேலும் கிரைமியா வளைகுடாவில் உக்ரைன் சட்டங்கள் இனி செல்லுபடியாகாது என்றும் பிரகடனம் செய்தது.
கிரைமியாவின் வேண்டுகோளை ஏற்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அதை ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்துள்ளார்.
மேலும் கிரைமியாவை ரஷ்யாவுடன் முறைப்படி இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க முடிவு செய்துள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்