உலகின் சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவிற்கு 9ஆவது இடம்

உலகின் சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவிற்கு 9ஆவது இடம்

உலகின் சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவிற்கு 9ஆவது இடம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2014 | 10:20 am

உலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தை இளையராஜா பிடித்துள்ளார்.

உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான ‘taste of cinema’ உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9ஆவது இடத்தினை பிடித்திருக்கிறார்.

இதில் இத்தாலியை சேர்ந்த மொர்ரிகோன் முதல் இடத்தையும், அவுஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசையமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் 2ஆவது இடத்தையும், அமெரிக்க இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 45,000ற்கும் அதிக பாடல்கள் கொடுத்து, 950ற்கும் மேற்பட்ட படங்களில் இசைப்பணியாற்றியுள்ள இசைஞானி இளையராஜா இந்தப் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிறந்த இசைக்கோர்ப்பு, இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக taste of cinema இணையத்தளம் பாராட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்