இந்தியாவை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டது இலங்கை

இந்தியாவை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டது இலங்கை

இந்தியாவை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2014 | 8:44 am

உலகக் கிண்ண இருபதுக்கு-20 பயிற்சிப் போட்டியொன்றில் இலங்கை அணி இந்திய அணியை 5 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட் இழப்பிற்கு153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

154 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்