ஆப்பிரிக்க வலய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மஹிந்த சமரசிங்க விளக்கம்

ஆப்பிரிக்க வலய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மஹிந்த சமரசிங்க விளக்கம்

ஆப்பிரிக்க வலய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மஹிந்த சமரசிங்க விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2014 | 7:31 pm

இலங்கை தொடர்பான பிரேரணை வரைபின் விசாரணைகளுக்கு, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை இணைத்துக்கொள்ள யோசனை முன்வைத்துள்ளமை சர்வதேச விசாரணைக்காக முன்னெடுக்கப்படும் முயற்சியின் ஓரங்கமாகும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரையில் அங்கத்துவம் வகிக்கின்ற மற்றும் கண்காணிப்பு மட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஆப்பிரிக்க வலய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோதே மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபு மீதான இலங்கையின் எதிர்ப்பை இந்த சந்திப்பின்போது அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்வேறு விதமான உள்ளக செயற்பாடுகள் மூலம் முன்னோக்கிச் செல்லும் இலங்கையின் அர்ப்பணிப்பு குறித்து ஆப்பிரிக்க வலய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின்போதும், அதன் பின்னரும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஆப்பிரிக்க வலய நாடுகளிடம் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்