சிங்கள நடிகை மேர்சி எதிரிசிங்க இயற்கை எய்தினார்

சிங்கள நடிகை மேர்சி எதிரிசிங்க இயற்கை எய்தினார்

சிங்கள நடிகை மேர்சி எதிரிசிங்க இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2014 | 1:56 pm

இலங்கையின் பிரபல சிங்கள நடிகையான மேர்சி எதிரிசிங்க தனது 68 ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார்.

கம்பஹாவிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக உறவினரகள் தெரிவித்தனர்.

1964 ஆம் ஆண்டு கலைத்துறைக்குள் பிரவேசித்த மேர்சி எதிரிசிங்க 60 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், சுமார் 20 திரைப்படங்களிலும், எட்டு தொலைகாட்சி தொடர்களிலும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எம்.எம்.ஏ.கபூரும் காலமாகியுள்ளார்.

இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்