யுக்ரேனுடன் யுத்தம் புரிவதற்கு விரும்பவில்லை – ரஷ்யா

யுக்ரேனுடன் யுத்தம் புரிவதற்கு விரும்பவில்லை – ரஷ்யா

யுக்ரேனுடன் யுத்தம் புரிவதற்கு விரும்பவில்லை – ரஷ்யா

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 3:09 pm

யுக்ரேனுடன் யுத்தத்தை விரும்பவில்லை என ரஷ்யா  தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்  பாதுகாப்புச் சபை அவசரமாக கூட்டப்பட்ட வேளையில்  யுக்ரேன்  இடைக்கால பிரதமர் அர்செனி யெட்சன்யுக்கின் நேரடியான கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே  ரஷ்யாவின் ஐ.நாவுக்கான தூதுவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்

க்ரைமியாவிற்கு ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான பொதுவாக்கெடுப்பொன்றினை நடத்துவதற்கு உரிமை இருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது

இந்நிலையில் யுக்ரேனின் எல்லைக்கு அருகே 8000 ரஷ்யப் படையினர் இராணுவப் பயிறசிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தப் பயிற்சிகளில் எறிகணைகள்,ரொக்கட் ஏவுகணைகள் தொடர்பான பயிற்சிகளும் இடம்பெறுவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

க்ரைமியா ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான  சர்ச்சைக்குரிய பொதுவாக்கடுப்பினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளதையிட்டு  சர்வதேச அரசியலில் பதற்ற  நிலையயை தோற்றுவித்துள்ளது

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ரஷ்ய வெளியுறவுத்துறை சர்ஜெய் லவ்ரோவை லண்டனில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்