மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பேச்சுவார்த்தையை நடத்துவது சிறந்தது – இந்தியா

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பேச்சுவார்த்தையை நடத்துவது சிறந்தது – இந்தியா

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பேச்சுவார்த்தையை நடத்துவது சிறந்தது – இந்தியா

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 6:56 pm

இந்திய மற்றும் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், பேச்சுவார்த்தையை நடத்துவது சிறந்ததாக அமையுமென தமிழக விசைப்படகு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கை இந்திய மீனவ சங்கம் ஆகியன தெரிவிக்கின்றன.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டமை தொடர்பில் நியூஸ் பெஸ்ட்டிற்கு கருத்து தெரிவிக்கையில் அதன் தலைவர் என். தேவதாஸன் இதனைக் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்திய – இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திடீரென பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்