தோனி, முதல் அரைச்சதம் அடிப்பது எப்போது?

தோனி, முதல் அரைச்சதம் அடிப்பது எப்போது?

தோனி, முதல் அரைச்சதம் அடிப்பது எப்போது?

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 12:23 pm

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி இறுதி கட்டத்தில் அதிரடியாக ஒட்டங்களை பெற்று அணியை வெற்றி பெறச் செய்வதில் வல்லவர்.

நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் கடைசி கட்டத்தில் வெளுத்து வாங்கும் தோனி, சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் இன்னும் ஒரு அரைச்சதம் கூட பெறவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தோனி பெரும்பாலும் 5 அல்லது 6ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார். இதனால் குறைவான பந்துகளை மட்டுமே சந்திக்க முடியும். எனவே அரைச்சதம் அடிப்பது கடினமான விஷயமே. தோனி விளையாடிய 43 சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 16 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார். ஆனால், அதற்குள் ஓவர்கள் முடிவடைந்ததே அரைச்சத வாய்ப்பு நழுவியதற்கான காரணம்.

தோனியை அடுத்து தென் ஆப்பிரிக்க சகலதுறை ஆட்டவீரர் எல்பி மோர்கல், அயர்லாந்தின் கேரி வில்சன், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, ஆவுஸ்திரேலியா விக்கெட் கீப்பர் பிரட் ஹேடின், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டேரன் சமி ஆகியோர் அதிக ஓட்டங்களை பெற்றும் அரைச்சதம் அடிக்காதவர்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

இதுவரை 64 ஆட்டங்களில் விளையாடியுள்ள நியூஸிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 1,959 ஓட்டங்களுடன் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 1,335 ஓட்டங்கள் அடித்துள்ள இலங்கையின் ஜெயவர்தன இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் இதுவரை 13 துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ளனர். இந்திய வீரர்களில் கௌதம் கம்பீர் அதிகபட்சமாக 932 ஓட்டங்களை பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்