தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 9:16 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பானது.

இந்த 2 மாகாணங்களிலும் இம்முறை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 321 அரசாங்க ஊழியர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றிருந்தனர்.

இந்த இரு தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க இயலாதவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தமது வாக்குகளை புள்ளடியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்ற நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் விசேட உத்தியோகத்தர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளாலும் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்