தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 9:24 am

மாத்தறை மற்றும் காலி பகுதிகளில் இருந்து கொழும்பிற்கான சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தறை – கொழும்பு அதிவேக வீதியூடாக சேவையில் ஈடுபடுவதற்காக 35 பஸ்களுக்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்காததை ஆட்சேபித்து இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பஸ் சங்கத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் காலி – கொழும்பு சேவையிலீடுபம் பஸ் ஊழியர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக காலி பஸ் சங்கத் தலைவர் சுசந்த சொய்ஸா தெரிவித்தார்.

ஆயினும், இந்த தனியார் பஸ் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தனவிடம் வினவப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்தே இந்த பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தெற்கு மார்க்கத்திலான தனியார் பஸ் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதன் பிரகாரம் கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தறை வரையான கரையோர மார்க்கத்தில் 5 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்