கொப்பறா ஆலையில் தீ

கொப்பறா ஆலையில் தீ

கொப்பறா ஆலையில் தீ

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 10:31 am

சிலாபம் மைக்குளம் பகுதியிலுள்ள கொப்பறா ஆலையொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்த தீ அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தீயினால் ஆலையில் காய்ச்சுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு கொப்பறாக்கள் தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலவர்களின் உதவியுடன் ஆலையின் ஊழியர்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்