காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்திற்கும் விஸ்தரிப்பு

காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்திற்கும் விஸ்தரிப்பு

காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்திற்கும் விஸ்தரிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 9:45 am

காணாமற்போன மலேஷிய பயணிகள் விமானம் தொடர்பான  தேடுதல் பணிகள் இந்து சமுத்திரத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்து சமுத்திரத்தில்  முன்னெடுக்கப்படவுள்ள  தேடுதல் பணிகளில் அமெரிக்கா தனது  முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது

இதுவரை  விமானம் குறித்த புதிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதுவரை இது தொடர்பான தேடுதல் பணிகள் தென் சீன கடற்பிராந்தியத்திலும்,மலாக்கா நீரிணைப் பகுதியிலும் மெற்கொள்ளப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது

தமக்கு கிடைக்கப் பெற்ற புதிய  தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய  விமானத்தை தேடும் பணிகளை இந்து சமுத்திரத்தை நோக்கி நகர்த்தவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

இந்த விமானம் கடந்த சனிக்கிழமை 239 பயணிகளுடன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்