இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 2:41 pm

கலேவெல மற்றும் மொனராகலை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

கலேவெல – யட்டிகல்பொத்த சந்தியில் நேற்றிரவு டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொட்டுகொட பகுதியைச் சேர்நத 39 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மொனராகலை, தம்பகல்ல, எட்டாம் கட்டை பகுதியில் நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

2 பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர் மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்