அரிசி விலை அதிகரிப்பு; உலக உணவுத் திட்டத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நன்கொடை!

அரிசி விலை அதிகரிப்பு; உலக உணவுத் திட்டத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நன்கொடை!

அரிசி விலை அதிகரிப்பு; உலக உணவுத் திட்டத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நன்கொடை!

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 4:28 pm

உலக உணவுத் திட்டத்துக்கு இலங்கை 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி இஸ்மாயில் ஒமரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கையின் சார்பாக வழங்கியுள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, நிதியமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் உட்பட மேலும் சில முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்